மூதூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் :வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய் !!
மூதூர் முறாசில்: மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதிகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று வெள்ளிக் கிழமை மாபெரும்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_35.html

மூதூர் முறாசில்: மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதிகவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று வெள்ளிக் கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மூதூர் நகரத்திலுள்ள 15ற்கும் மேற்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல்களில் இருந்து மூதூர் பிரதான வீதியில் கலாசார மண்டபத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோ~ங்களை எழுப்பினர்.
கடந்த திங்கட் கிழமை முதல் தொடராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் வியாழக்கிழமை முதல் ஹர்தாலை அனு~;டித்து வரும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைத்தியசாலை அபிவிருத்திக்குழுத் தலைவர் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக தெரிவித்ததாவது, 1972ஆம் ஆண்டு முதல் மாவட்ட வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் இவ்வைத்தியசாலையானது
2006ஆம் ஆண்டு தளவைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. அது தரமுயர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் மாவட்ட வைத்தியசாலையைப் போலவே தேவையான வசதிகளற்ற நிலையிலேயே செயற்பட்டு வருகின்றது.
இவ்வைத்தியசாலையில் குறைந்தது 26 வைத்தியர்கள் தேவைப்பட்டபோதும் கடமையில் 9 வைத்தியர்களே இருக்கின்றனர். வைத்தியர்கள் இங்கு வந்து சேவை புரிவதற்கு அவர்களுக்கான விடுதி வசதியும் இல்லை. வைத்தியசாலைக்குத் தேவையான தாதியர்ää சிற்றூழியர் உள்ளிட்ட ஏனைய ஆளணியும் போதியளவில் இல்லை.
வெளிநோயாளர் பிரிவானது நாளாந்தம் வருகை தரும் நோயாளர்களுக்குப் போதுமானதாக இல்லை. இவ்வாறு வைத்தியசாலையில் அனைத்துப் பிரிவிலும் தேவைகள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு நிலவி வரும் குறைபாடுகள் சம்பந்தமாக சுகாதார சேவைப் பணிப்பாளரிடமும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை எடுத்துக்கூறிய போதும் அவர்களால் கொடுப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
இதனால் இவ்வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு மூதூர் மக்கள் அனைவரும் இணைந்து ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்கின்றனர் என்றார்.




Sri Lanka Rupee Exchange Rate