சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்கள் கசிவு!:விக்கிலீக்ஸின் அடுத்த அதிரடி

சமீபத்தில் தனது இணையத் தளத்தில் சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்களைத் தான் வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத் தளம் அதிரடியாக அ...



சமீபத்தில் தனது இணையத் தளத்தில் சவுதி அரேபியா குறித்த 60 000 இரகசிய ஆவணங்களைத் தான் வெளியிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத் தளம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை அரபு மொழியில் உள்ளதுடன் மேலும் 5 இலட்சம் சவுதி அரசு தொடர்பான இரகசிய ராஜ தந்திர ஆவணங்களையும் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அது தொடர்பான பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூட விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த ஆவணங்கள் தொடர்பான நம்பகத் தன்மையை உடனடியாக நிரூபிக்க முடியவில்லை. என்ற போதும் இதில் பல சவுதி இராச்சியம் மற்றும் வெளியுறவு அமைச்சு, தொடர்பானதாகவும் இதில் பல அவசரமானவை மற்றும் வகைப் படுத்தப் பட்டவை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளன. மேலும் இதில் ஓர் ஆவணம் வாஷிங்டனிலுள்ள சவுதி தூதரகத்தில் இருந்து பெறப்பட்டதும் ஆகும். எனினும் இந்த ஆவணங்களில் தனது மிக நீண்ட நாள் பிராந்திய அரசியல் எதிரியான ஈரானுடனான சவுதியின் உறவு, சிரியக் கிள்ர்ச்சியாளர்களுக்கும், எகிப்தின் இராணுவ அரசுக்கும் சவுதி அளித்து வரும் மறைமுக ஆதரவு மற்றும் கைகூடி வரும் ஈரானுடனான சர்வதேசத்தின் அணுசக்தி ஒப்பந்தம் மீதான சவுதியின் எதிர்ப்பு என்பவை குறித்த பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரக் கூடும் என ஊகிக்கப் படுகின்றன.

இதேவேளை ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து முன்னால் அல்கொய்தா தலைவனான ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்டது தொடர்பில் மரணச் சான்றிதழை பின்லேடன் மகன் பெற்றுக் கொண்டதாக சவுதி உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்கள் சுட்டிக் காட்டுவது பற்றிய ஆவணமும் இதில் அடங்கியிருந்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் சர்வதேசத்திலுள்ள சுமார் 247 அமெரிக்க தூதரகங்களில் இருந்து தமது நாட்டுக்கு அவர்கள் பெற்ற ஆயிரக் கணக்கான இரகசிய குறிப்புக்களுடன் கூடிய 21/2 இலட்சம் ஆவணங்களைக் கசிய விட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் அமெரிக்காவை விட்டு வெளியேறி இலண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தஞ்சம் அடைந்ததுடன் இன்றுவரை அங்கேயே அடைப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 2274662456869855490

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item