தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 25 ஆவது ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு!
தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜொஹன்னாஸ்பேர்க்கில் தற்போது 2015 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றத...
http://kandyskynews.blogspot.com/2015/06/25.html
தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜொஹன்னாஸ்பேர்க்கில் தற்போது 2015 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது.
இம்முறை ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டில் (AU summit) முக்கியமாக உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் ஆப்பிரிக்க அகதிகள் பிரச்சினை, இன ஒடுக்குமுறை மற்றும் புருண்டியில் இடம்பெற்று வரும் வன்முறைக் குழப்ப நிலை ஆகியவை முக்கியமாக அலசி ஆராயப் பட்டு வருகின்றன.
இதைவிட இம்முறை பெண்களுக்கான உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப் படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் விட புருண்டி விவகாரமே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதாவது புருண்டியில் அதிபர் பியெர்ரே ந்குருன்ஷிஷா மூன்றாவது முறையும் பதவிக்கு வர முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கும் மக்கள் மற்றும் அவருக்கு எதிரான இஸ்லாமியப் போராளிகளின் அச்சுறுத்தல் என்பவையே முக்கிய பிரச்சினையாக நோக்கப் படுகின்றன.
மேலும் நைஜீரியா முக்கியமாக எதிர்நோக்கி வரும் போக்கோ ஹராம் போராளிகளின் அச்சுறுத்தல் குறித்தும் பேசப் பட்டு வருகின்றது. இதேவேளை இந்த உச்சி மாநாட்டில் பிரபல ஹாலிவுட் நடிகை, படத் தயாரிப்பாளர் மற்றும் அகதிகளுக்கான ஐ.நாவின் UNHCR அமைப்பின் விசேட தூதருமான ஏஞ்சலினா ஜூலி இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியுள்ளார். இதில் அவர் உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர பூகோள ரீதியிலான ஆதரவு இன்னமும் அதிகம் தேவை என அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னாஸ்பேர்க் நகரில் இவ்வருடத்துக்கான AU உச்சி மாநாடானது ஜூன் 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate