நிந்தவூரில் இளைஞர் கழுத்து வெட்டப்பட்டு உயிரிழப்பு: கொலை என சந்தேகம்

சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டி உயிரிழந்துள்ளார். நிந்தவூர் பகுதி வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ...



சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டி உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் பகுதி வீடொன்றினுள் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறங்கிக்கொண்டிருந்த தனது மகனின் அலறல் கேட்டதை அடுத்து, அவரின் அறைக்குள் சென்று பார்த்தபோது, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மகன் வீழ்ந்து கிடப்பதைத் தாயார் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதுவொரு கொலை சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இளைஞன் உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

தலைப்பு செய்தி 5740366193733987895

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item