ஈராக் மற்றும் சிரியாவின் இறுதி எல்லைக் கடவையும் இஸ்லாமிய அரசிடம் வீழ்ந்தது
ஈராக்கிலும் ,சிரியாவிலும் போராடிவருகின்ற இஸ்லாமிய அரசு இயக்கம் ஈராக் – சிரியா ஆகிய நாடுகளின் இறுதி எல்லைக் கடவையையும் கைபற்றியுள்ளது சிரி...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_721.html
ஈராக்கிலும் ,சிரியாவிலும் போராடிவருகின்ற இஸ்லாமிய அரசு இயக்கம் ஈராக் – சிரியா ஆகிய நாடுகளின் இறுதி எல்லைக் கடவையையும் கைபற்றியுள்ளது சிரியா ,ஈராக் அரசாங்களின் வசம் இருந்தஇறுதி எல்லைக் கடவையான ,அல் வலீத் என்ற கடவையையே இப்போது இஸ்லாமிய அரசு கைப்பற்றியுள்ளது
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள எல்லைக் கடவையுடன் ஈராக்கையும் ,சிரியாவையும் அந்த அமைப்பினர் முழுமையாக இணைத்துள்ளனர்.ஈராக்கில் கடந்த ஞாயிறன்று றமாடி நகரை கைப்பற்றிய இஸ்லாமிய அரசு, ஹப்பானியாவுக்கு வெளியே, ஷியா ஆயுதக்குழுக்கள் சண்டைக்காக குவிந்துவந்த அரசாங்க பாதுகாப்பு பகுதியை உடைத்து அதையும் கைப்பற்றியுள்ளது
தாம் ஏற்கனவே கைப்பற்றியுள்ள,பலுஜாவை நோக்கி ஜிஹாதிகள் இப்போது கிழக்காக முன்னேறி வருகிறார்கள். ஈராக் தலைநகர் பாக்தாதும் அதே திசையிலேயே இருக்கிறமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை இஸ்லாமிய அரசு நேற்று சிரியாவில் கைப்பற்றிய பல்மெய்ரா நகரில் தம்மை ஸ்திரப்படுத்தி வருகிறது . கைப்பற்றிய இந்த நகரத்துடன் சிரியாவின் 50 வீதமான பகுதியை இஸ்லாமிய அரசு கைப்பற்றியுள்ளது .
கடந்த எட்டு மாதங்களாக இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வான்வளித் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த புதிய பிரதேசங்களை இந்த அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்
அதேவேளை சிரியாவின் பல்மெய்ரா பிரதேசம் 2000 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட நகரமாகும் , புராதன வரலாற்று சின்னங்கள் கொண்ட இந்த நகரின் புராதான சின்னங்கள் தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று சவூதி அரபியாவின் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது .இதில் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்கிறது.