அமெரிக்க உயரதிகாரிகளை தீர்த்துக்கட்ட உத்தரவிட்ட ஒசாமா: கசிந்த ரகசியம்
ஒசாமா பின்லேடன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லே...


ஒசாமா பின்லேடன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், ஒசாமாவை குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் தான் இருக்கின்றன.
சமீபத்தில் கூட ஒசாமாவின் உடல் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்படாமல் கடலில் வீசப்பட்டது என்றும் அவரை காட்டிக்கொடுத்தது பாகிஸ்தான் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஒசாமாவின் அபோடாபாத் நகர வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா இன்று வெளியிட்டுள்ளது.
அதில், தனது சகாக்களுக்கு ஒசாமா அனுப்பிய கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் கோஷ்டி மோதல்களை கைவிட்டு, அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் வகையில் அதிரடி தாக்குதல்களை நடத்துமாறு அறிவுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அமெரிக்க மந்திரிகள் மற்றும் அரசின் முக்கிய உயரதிகாரிகளை ஆளில்லா விமான மூலம் தாக்குதல் நடத்தி தீர்த்துக்கட்டுமாறு ஒசாமா உத்தரவிட்டிருந்த ரகசியமும் இதன் வாயிலாக வெளியாகியுள்ளது.