இன்னும் கெட்டவார்த்தைகள் தெரிந்திருந்தால் அவற்றையும் பயன்படுத்தியிருப்பேன்! - என்கிறார் வாசுதேவ
பிரதமர் ரணிலை திட்டியதனை போன்று வேறு கெட்டவார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் பயன்படுத்தி திட்டியிருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வாச...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_585.html
பிரதமர் ரணிலை திட்டியதனை போன்று வேறு கெட்டவார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் பயன்படுத்தி திட்டியிருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் நன்மைக்காகவே தான் அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தினேன்.
பிரதமர் ரணிலை திட்டியதனை போன்று வேறு கெட்டவார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் பயன்படுத்தி திட்டியிருப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் நன்மைக்காகவே தான் அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தினேன்.
எப்படியிருப்பினும் எனக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. நாடாளுமன்றத்தில் இவை ஒரு சாதாரணமான விடயமாகும். அந்த நேரத்தில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான கோபம் காரணமாகவே இவ்வாறு பேசினேன். நான் அவ்வாறு திட்டியதற்காக ஒரு போதும் கவலைப்படுவதில்லை.குறித்த சந்தர்ப்பத்தின் போது நான் பயன்படுத்தியமை வெறும் கடுமையான வார்த்தைகளை மாத்திரம் அல்ல, அவரை தாக்கும் வகையிலான வார்த்தைகளை தான் பயன்படுத்தினேன்.
அதனையும் விட கடுமையான வார்த்தைகள் தெரிந்திருந்தால் அதனையும் நான் பயன்படுத்தியிருப்பேன்.பிரதமர் நடந்து கொண்ட முறையும் அவ்வாறானதே. நான் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் அது. பிரதமர் என்னை பேச விடாமல் அமர வைக்கப் பார்த்தார் எனவே தான் நான் அவ்வாறு பேசினேன். பிரதமர் அல்ல கடவுள் என்றாலும் சட்டதிட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அமையவே செயற்பட வேண்டும்.
பிரதமர் யானை தலையுடனே செயற்படுகின்றார். என்னிடம் போன்று எத்தனை பேரிடம் அவர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இவ்வனைத்தையும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்து இறுதியில் இவ்வாறு பேசிவிட்டேன்.அதன் பின்னரும் நான் பிரதமரை சந்தித்தேன். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சுமுகமாக கலந்துரையாடிக் கொள்ளவில்லை. அவசியம் என்றால் கடமை நடவடிக்கைகளுக்காக கலந்துரையாடுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.