ஓரினச் சேர்க்கையாளருக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயின் விளம்பரத்தை பார்த்து 73 பேர் ஆர்வம்
மும்பையைச் சேர்ந்த தாயார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு, மணமகன் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தை பார்த்து 73 பேர் தொடர்பு கொண்டதாக ...
http://kandyskynews.blogspot.com/2015/05/73.html
மும்பையைச் சேர்ந்த தாயார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு, மணமகன் வேண்டும் என்று கொடுத்த விளம்பரத்தை பார்த்து 73 பேர் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பத்மா ஐயரின் மகன் ஹரிஷ் ஐயர் (36) ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.
என்ஜிஓ ஒன்றின் தலைவராக உள்ள ஹரிஷ் ஐயர், ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்த பத்மா அவருக்கு ஏற்ற மணமகனை தேடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.
அந்த விளம்பரத்துக்கு சில தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், பலர் விளம்பரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் ஹரீஷ் வெளியிட்டதற்கு, பல தரப்பில் இருந்து ஆதரவு குவிந்துள்ளது.
இதுகுறித்து ஹரீஷின் தாய் பத்மா கூறுகையில், விளம்பரத்தைப் பார்த்து இதுவரை ஹரீஷை 70 பேர் தொடர்பு கொண்டு திருமணம் குறித்து பேசியுள்ளனர்.
எனது மகனை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக எனக்கு 73 பேர் இ-மெயில் அனுப்பியுள்ளனர்.
இவ்வளவு மெயில் வந்ததை பார்த்து என் மகன் ஹரீஷ் ஆச்சரியமடைந்துள்ளான் என்று தெரிவித்துள்ளார்.
ஹரீஷ் இதுகுறித்து கூறுகையில், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் என்னை திருமணம் செய்து கொள்ள மெயில் வந்துள்ளது.
தவிர குஜராத்திகள் பலரும் முஸ்லிம்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து விருப்பம் தெரிவித்துள்ள ஒருவர், திருமணத்துக்குப் பிறகு எனக்கு அவருடைய மாளிகையைக் கொடுப்பதாக கூறியுள்ளார்.
வரன் தேடி விளம்பரம் கொடுத்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஐயருக்கு முன்னுரிமை என்று என் தாய் குறிப்பிட்டதை எதிர்த்து அவருக்கு 300 மெயில்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்