மகிந்த போட்டியிட்டால் வெளியேறத் தயாராகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அனுமதி வழங்கப்பட்டால், ஐக்க...


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அனுமதி வழங்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் ஐதேக கூட்டணியுடன் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக நம்பகமாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது அரசியல் கட்சிகளுடனும் குழுக்களுடனும் இணைந்த கூட்டணியாக களமிறங்க தீர்மானித்துள்ளது.
தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதென ஐக்கிய தேசியக் கட் சி தீர்மானித்துள்ள போதிலும், கூட்டணியாக களமிறங்கும் போது அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஏனைய கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானமொன்றுக்கு வரவில்லையெனவும், கூட்டமைப்பு உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்பொழுது ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அனுமதி வழங்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் 43 பேர் ஐதேக கூட்டணியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள வார இதழொன்று தெரிவித்துள்ளது.

Related

தலைப்பு செய்தி 7993431617424228752

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item