பொதுத்தேர்தலைத் தாமதப்படுத்த முனைகிறது சுதந்திரக் கட்சி! - லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு
பொதுத்தேர்தலை தாமதப்படுத்துவதற்காகவே 19ஆவது திருத்தச் சட்டமூலத்தையும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தையும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்குமாறு சுதந...


19ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 19ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தை பிற்போடுமாறு சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 40 வருடகாலமாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமென்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தி வந்துள்ள நிலையில் இதற்கு எதிராக வாக்களிக்காது.
1988ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரதான கருப்பொருளாக காணப்பட்டது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பதாகும். அவ்வாறே, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொப்பேகடுவ ஆகிய சுதந்திரக்கட்சி தலைவர்களும் இதனை ஒழிக்க வேண்டுமென்ற கொள்கைகளை தயாரித்து தேர்தலில் போட்டியிட்டனர்.இந்நிலையில், நிறைவேற்று ஜனாதி பதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுக்கும் போது சுதந்திரக்கட்சி காலைவாரும் செயற்பாட்டில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.