தேர்தல் முறை மாற்றத்துக்கு சிறுபான்மையினக் கட்சிகள் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன. இது குறித்து...


இலங்கையில் அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதை சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் கூட்டாக எதிர்த்துள்ளன. இது குறித்து ஆராய்வதற்காக நேற்று அந்தக் கட்சிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற பல சிறுபான்மைக் கட்சிகளும், ஜேவிபி போன்ற பல சிறிய கட்சிகளும் அதில் கலந்துகொண்டன.

இலங்கையின் தற்போதைய தேர்தல் முறையே ஒப்பீட்டளவில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்கு சாதகமானது என்றும் ஆகவே அதனை மாற்றக்கூடாது என்றும் அந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மக்கள் போரினால் இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் அங்கு அங்கத்தவர் தொகையை உடனடியாக குறைக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாக அந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Related

இலங்கை 6763280568709443368

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item