மோசடிகளில் ஈடுபட்ட கோத்தபாய விரைவில் கைது?

ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர...

ஊழல் மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் கருத்து வெளியிட்டார்.

யுத்தக் குற்றச்சாட்டை முன்வைத்து கோத்தபாய ராஜபக்ஷவைக் கைது செய்ய தடைகள் உள்ளது. இதன் காரணமாக மோசடி குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்யத் திட்டமிட்டு வருவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளில் எவ்வாறு பெருந்தொகைப் பணம் சேமிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணைண நடத்துவதாக அரசாங்கம் கூறியிருந்தது.

குற்றம் இழைக்கப்பட்டிருப்பின் அதனை நிரூபித்துக் காண்பிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். அவ்வாறு சவால் விடுக்கப்பட்டு, நேற்றுடன் 3 வாரங்கள் ஆகின்ற போதிலும் அது நிரூபிக்கப்படவில்லை என்றும் தேரர் தெரிவித்தார்.

Related

இலங்கை 3312711801312324417

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item