எனது குடும்ப உறுப்பினர்களை சிறையில் அடைக்க திட்டம்!: மஹிந்த புலம்பல்
எனது குடும்ப உறுப்பினர்களை சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாத...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_467.html

எதிர்வரும் ஜூலை மாதமளவில் எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இது குறித்து பேசப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய நிறைவேற்றுப் பேரவை யார் வீட்டில் சோதனை நடத்த வேண்டும், யாரை கைது செய்ய வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கின்றது.
மக்கள் ஒரு நபருக்கு அதிகாரத்தை வழங்கிய போதிலும், இன்று வேறும் தரப்பினர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
குரோத அரசியலில் ஈடுபடாது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கப்பட வேண்டும்.
பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் இதனை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தெல்கொட ஸ்ரீ சுதர்மராமய விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate