உகண்டா அரசாங்கத்தின் விருப்பமின்றி அந்நாட்டுக்கு நிதியை ஒதுக்கிய மஹிந்த
உகண்டா அரசாங்கம் ஏற்காதநிலையில் அந்த நாட்டின் அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கு இலங்கையின் முன்னாள் அரசாங்கம் 170 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கிய...


பொருளாதாரத்துறை பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த அபிவிருத்தி திட்டத்துக்கு என்ன நடந்தது என்று தெரியாது. எனினும் ஒப்பந்தக்காரருக்கு 94000 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்காகவே இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் அதனை உகண்டாவின் அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
இதனையடுத்து இரண்டு கட்டிடங்களை கட்டித்தர இலங்கை அரசாங்கம் முன்வந்தபோதும் அதனையும் உகண்டா அரசாங்கம் நிராகரித்துவிட்டது.
இதன்பின்னரும் பெண்களுக்கான விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசாங்கம் யோசனையை முன்வைத்தது. அதனையும் உகண்டா அரசாங்கம் நிராகரித்தது.
இந்தநிலையில் அந்த நிதிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.