சீகிரிய கல்லில் அறியாமையில் கிறுக்கிய பெண் சிறையில்! திருடர்கள் வெளியே: துமிந்த நாகமுவ
சீகிரியல் கிறுக்கல்பாவில் அறியாமையில் கிறுக்கிய பெண் இரண்டு வருடம் சிறை செல்லும் போது திருடர்கள் மோசடிகாரர்கள் வெளியே சுதந்திரமாக வாழ்வதாக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_671.html

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது என்று தற்போது கூறுகின்றனர்.
மைத்திரிபால சிறிசேன அதனை செய்தால், அவருக்கு தடிமன் ஏற்பட்டு விடுமாம். ரணில் விக்ரமசிங்கவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு விடுமாம்.
இதனால், 19 வது திருத்தச் சட்டத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகின்றனர். சுயநினைவுடன் இப்படி கூறுகின்றனரா என நாங்கள் கேட்கிறோம்.
சீகிரிய கிறுக்கல் பாவின் கிறுக்கினார் என்பதற்காக யுவதி ஒருவரை இரண்டு வருடங்களுக்கு சிறையில் தள்ளினர். பெரும் திருடர்கள் வெளியில் இருக்கும் போது, அப்பாவிகள் சிறைக்கு போகின்றனர்.
ஆட்சியாளர்களே சட்டத்தை அமுல்படுத்துகின்றனர். அர்ஜூன் மகேந்திரன் போன்றவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இன்று மறந்து விட்டனர். திருடர்களை பிடிக்கும் கதையையும் மறந்து விட்டனர்.
மைத்திரிபாலவின் நாற்காலி அதிர்ந்தாலும் திருடர்களை பிடிக்க மாட்டார்கள் என்றார்.


Sri Lanka Rupee Exchange Rate