அளுத்கமை படுகொலை: குற்றவியல் பிரிவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
.அளுத்கமையில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிக்காமல், அச...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_95.html
.அளுத்கமையில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிக்காமல், அசமந்தப் போக்கை கடைப்பிடித்தமை தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வழக்கு இன்று களுத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடிதம் ஒன்றை அனுப்புமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய வழக்கில் இனக்கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பம் சார்பாக சட்டத்தரணி சப்ராஸ் ஹம்ஸாவும்,RRT அமைப்பினரும் ஆஜராகினர்



Sri Lanka Rupee Exchange Rate