நீர்வீழ்ச்சியில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
பெற்றோரின் எதிர்ப்பையடுத்து காதல் ஜோடியொன்று கொஸ்லந்தை உப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியலும நீர்வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_946.html
பெற்றோரின் எதிர்ப்பையடுத்து காதல் ஜோடியொன்று கொஸ்லந்தை உப பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியலும நீர்வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மரணமானவர்கள் இருவரும் கொஸ்லந்தை நிக்கப்பொந்த கல்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சரவணா யோகராஜன் (வயது 17) மற்றும் நிரஞ்சலா சகுந்தலா (வயது 16) என்ற யுவதியுமே ஒன்றாக நீர்வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்களாவர்.
யுவதியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன், இளைஞனின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.