பம்பலப்பிட்டி சென் பீற்றர் கல்லூரியில் பெண்ணின் சடலம் மீட்பு
பம்பலப்பிட்டிய சென் பீற்றர் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து நிர்வாண நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_231.html
பம்பலப்பிட்டிய சென் பீற்றர் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து நிர்வாண நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் ஊழியர் ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெவித்தார்.
44 வயதான குறித்த பணிப்பெண் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பெண் நிர்வாணமாக மீட்கப்பட்டமையால், அவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.