இலங்கை அதிபரின் சிங்கள மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

சிங்கள மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ...

Sri Lanka President Wishes for Ethnic Unity on Sri Lankan New Year
சிங்கள மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அதிபர் சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து மத கலாசார மற்றும் சமுதாய மக்களுக்குமான மதிப்புகளை போற்றுவதே அரசின் கடமை. இந்த புத்தாண்டு மக்களுக்கு இடையே ஒற்றுமையை உறுதி செய்யவும், சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக விளங்கவும் வேண்டுகிறேன். இந்த நேரத்தில், இன, மத பேதமின்றி நாம் அனைவரும் இலங்கை மக்கள் என்ற மன நிலையோடு மட்டும் ஒற்றுமை அமைதி நல்லெண்ணம் பகிர்தல் போன்ற உணர்வோடுபொதுப்படையுடன் வாழ்ந்து நலம் சேர்க்க வேண்டும். ஒற்றுமையுடன் வாழ்ந்து பெருமையடைந்ததே நமது வரலாறு. அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டியது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். புத்தாண்டில் வேற்றுமையின்றி அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து நாட்டில் செழிப்பு நிறைந்திட வழி செய்ய வேண்டும். நாடு வளம் பெற செழிப்புடன் திகழ அனைவரும் ஒற்றுமையுடன் நெறியான ஒரே சிந்தனையுடன் வாழ வேண்டும் என கூறியுள்ளார்

Related

இலங்கை 3348154242197707932

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item