இலங்கையின் வடபகுதிகளில் நீரில் நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருப்பது உறுதி.
இலங்கை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த மாதம் வலிகாமம் பகுதிகளில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_781.html
இப்பரிசோதனைகள் அனைத்தும் இலங்கையிலேயே நம்பகத் தன்மையானதும் சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதுமான அரசாங்க பகுப்பாய்வு நிறுவனத்தினால் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பரிசோதிக்கப்பட்ட 30 கிணறுகளிலுமே எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 கிணறுகளில் அதிக செறிவில் காணப்படுகின்றது. மேலும் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இக் கிணறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகவே உள்ளுர் அதிகாரிகளால் நடாத்தபட்ட சில ஆய்வுகளில் எண்ணெய் தொடர்பான நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டதும், இதனை அடுத்து மக்கள் தங்கள் கிணற்று நீரினைப் பாவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே.
இதனை விடவும் 2014 ம் ஆண்டு நீர்வழங்கல் அதிகார சபையினரால் பாரிய அளவில் முறையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 75 வீதமான கிணறுகளில் அதிகளவில் எண்ணெய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.