ஈழத் தமிழர்களின் ஆதரவாளரானஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் !

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ஹிலாரி கிளிண்டன்,67 டுவிட்டரில் தெரிவித்து உள்ளா...

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ஹிலாரி கிளிண்டன்,67 டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இத்துடன் ஒரு வீடியோவையும் மின்னஞ்சலையும் தன் ஆதரவாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கை நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கூறுகின்றனர். இத்துடன் தான் போட்டியிடுவதற்கான காரணங்களையும் ஹிலாரி விளக்குகிறார்.

2008ம் ஆண்டு ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் ஒபாமாவிடம் தோல்வி அடைந்த ஹிலாரி ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டிக்கு தயாராகிறார். ஒபாமா அரசில் 2009 - 13வரை வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த ஹிலாரி ஈழத் தமிழர்கள் மீது சிறிது கரிசனை கொண்டவர் என்று கூறப்படுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்தவேளை அதனை நிறுத்தவும் , போரை முடிவுக்கு கொண்டுவரவும் அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Related

உலகம் 7440799373690525773

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item