மைத்திரி, சந்திரிகா, மகிந்தவை ஒரே மேடையில் இணைக்கும் முயற்சி தோல்வி?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஒரே மேடையில் இணைக்க...


முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரட்னசிறி விக்ரமநாயக்கவின் அரசியல் வாழ்க்கைக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வில் சுதந்திரக் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களையும் இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பு பணிகளை ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க மேற்கொண்டு வருகின்றார். நிகழ்வில் பங்கேற்குமாறு சந்திரிக்காவிற்கு அழைப்பு விடுத்த போது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.
‘எனக்கு அரசியல் சொல்லித்தர முயற்சிக்க வேண்டாம்’ என சந்திரிக்கா குமாரதுங்க, விதுர விக்ரமநாயக்கவிற்கு கோபமாக கூறியுள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தான் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஒரே மேடையில் முன்வரிசையில் மஹிந்தவிற்கும் தமக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.