பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூத்த மகள் மறுமணம் செய்து கொண்டார்
தனுன திலக்கரட்னவை முதலில் திருமணம் செய்திருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூத்த மகள் அப்சரா பொன்சேகா, அண்மையில் மறுமணம் செய்து கொண்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_86.html

தனுன திலக்கரட்னவை முதலில் திருமணம் செய்திருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மூத்த மகள் அப்சரா பொன்சேகா, அண்மையில் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
நியூயோர்க்கில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இசிவியன் டி சரம் என்பவரை அவர் மறுமணம் செய்துள்ளார்.
இவர் நியூயோர்க்கில் உள்ள ஏர்னஸ்ட் எண்ட யங் என்ற நிறுவனத்தில் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
அப்சரா பொன்சேகா கடந்த 2007 ஆம் ஆண்டு தனுன திலக்கரட்னவை திருமணம் செய்து கொண்டார். கணனித்துறையில் பணியாற்றிய திலக்கரட்ன. முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான ஹசான் திலக்கரட்னவின் மைத்துனராவார்.
அமெரிக்காவில் வசித்து வந்த தனுன திலக்கரட்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவி செய்ய அவர் இலங்கை திரும்பியிருந்தார்.
தேர்தலுக்கு பின்னர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதுடன் தனுன திலக்கரட்ன தலைமறைவானார். திலக்கரட்ன சரத் பொன்சேகாவுக்கு எதிரான ஹைகோப் வழக்கில் மற்றும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பணியாற்றிய போது இராணுவத்திற்கு தளபாடங்கள் கொள்வனவு செய்ததில் ஊழல் இடம்பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து 2012 ஆம் ஆண்டு பொன்சேகா விடுவிக்கப்பட்டார்.
தனுன திலக்கரட்ன 2014 ஆம் டிசம்பர் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்ததுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது மைத்துனர் ஹசான் திலக்கரட்ன, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்தார்.
இது தனுன திலக்கரட்னவுக்கும் சரத் பொன்சேகா குடும்பத்திற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரத்தில் சரத் பொன்சேகா முக்கியமான நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate