பாகிஸ்தானுடன் இலங்கை 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டது
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் 6 உடன்படிக்கைகள் இன்று க...
http://kandyskynews.blogspot.com/2015/04/6.html

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இன்று முற்பகல் இடம்பெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
01- பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் சர்வதேச தொடர்புகள் மற்றும் வியூக கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் ஆகியவற்றிக்கு இடையிலான ஒத்துழைப்பு கற்கைகள் தொடர்பான உடன்படிக்கை..
02- போதைப் பொருள், நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருளை தயாரிக்க பயன்படுத்தும் இரசாயனங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுவதற்கு எதிரான ஒத்துழைப்பு உடன்படிக்கையும் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
03- இலங்கையின் இடர் முகாமைத்துவம் அமைச்சுக்கும் பாகிஸ்தானின் தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
04- விளையாட்டுத்துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
05- பாகிஸ்தான் கப்பற் கூட்டுத்தாபம் மற்றும் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் இடையிலும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
06- இலங்கை அணு சக்தி மற்றும் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக்குழு இடையில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பிலும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த உட்னபடிக்கைகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு மற்றும் விவகார அமைச்சின் ஆலோசகர் ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்


Sri Lanka Rupee Exchange Rate