ரணில் மக்களை ஏமாற்ற முடியாது: சம்பிக்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் முன்வைக்கவுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ...


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியை ஏமாற்ற முடிந்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஏற்கனவே தமக்கு காட்டிய அரசியல் யாப்புத் திருத்த பிரதியும் உச்ச நீதிமன்றுக்கு சமர்ப்பித்த யாப்புத் திருத்தப் பிரதியும் மாறுபட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று பிரதமர் முறையை கொண்டுவர அனுமதி இல்லை என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
1995ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணில் செய்த செயலால் 20 வருடங்கள் அக்கட்சி தோல்வியை தழுவியதாகவும் அதேதிட்டத்தை நாட்டுக்கு செய்ய முடியாது என்றும் இதனை நாங்கள் எதிரப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க கூறியுள்ளார்.