நான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை: விநாயகனின் அவதாரம் என்று பார்க்க குவியும் மக்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து...


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்து சில நாட்களே ஆன நிலையில், பெயர் வைக்கப்பட்டாத இக்குழந்தை விநாயகரின் அவதாரம் என்று கருதும் அம்மாநில மக்கள் பல பகுதிகளில் இருந்தும் குழந்தையை பார்க்க குவிந்து வருகின்றனர். விநாயகரும் நான்கு கைகளுடன் பிறந்தவர் என்பதால் இக்குழந்தையும் விநாயகரின் அவதாரம் என்றே கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக உள்ளவர்கள் கருதுகின்றனர். இந்த அதிசய குழந்தையை பார்க்க வந்த குந்தலேஷ் பாண்டே கூறுகையில், 72 மைல் தொலைவிலிருந்து இந்த அவதார குழந்தையை பார்க்க வந்தேன் என்றார்.

எனது நண்பர் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பியபோது, போட்டோஷாப்பில் வேலை செய்து குழந்தையின் கை, கால்களை அதிகமாக காண்பித்திருப்பார் என கருதினேன். ஆனால் அது உண்மை என்று நண்பர் கூறியதால், அதிசய குழந்தையை பார்க்க நேரில் வந்தேன் என்று அவர் மேலும் கூறினார்.

நாளுக்கு நாள் குழந்தையை பார்க்க வரும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை சமாளிக்க பெற்றோர்கள் கஷ்டப்படுகின்றனர். எனினும் கருவில் இருந்த இரட்டை குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடால் தான் குழந்தை இவ்வாறு பிறந்துள்ளதாக மருத்துவ உலகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 4669666059391862360

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item