உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 132ம் இடத்தில்
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை 132ம் இடத்தை வகிக்கின்றது. 2015ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் இந்த...
http://kandyskynews.blogspot.com/2015/04/132.html

அமெரிக்க பொருளியலாளரான ஜெப்ரி செர்சஸ் மற்றும் லண்டன் பொருளியல் கல்லூரியின் நலத்திட்டப் பிரிவு தலைவர் ரிச்சர்ட் லேயார்ட் ஆகியோர் ஆய்வை நடத்தியுள்ளனர்.சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகழ்ச்சியான நாடுகளின் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து காணப்படுவதுடன் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் வகிக்கின்றன.
அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளை விடவும் இலங்கை பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இந்த வரிசையின் இறுதி இடத்தை ஆப்கானிஸ்தான் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate