எகிப்து :சிஷிக்கு மீண்டும் முழு இராணுவ நிதியையும் வழங்க அமெரிக்கா இணக்கம்
எகிப்துக்கான அமெரிக்காவின் முழு இராணுவ உதவிகளும் மீண்டும் வழங்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா எகிப்து ”ஜனாதிபதி ” அப்துல் பாத்த...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_82.html

இதில் இடைநிறுத்தப்பட்டிருந்த எப்-16 யுத்த விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் எம்1ஏ1 டாங்கிகள் மீண்டும் வழங்கப்படும் என்று சிஷியு டன் தொலைபேசி ஊடே உரையாடிய ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அப்துல் பாத்தாஹ் அல் சிஷிமேற்கொண்ட இராணுவ சதிப்புரட்சியை அடுத்தே அமெரிக்காவின் இந்த உதவிகள் இடைநிறுத்தப்பட்டது. யெமனில் ஈரான் ஆதரவு ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி அரேபியாவின் கூட்டணியில் இடம்பிடித்திருக்கம் எகிப்து லிபியாவில் இஸ்லாமிய தேசம் போராளிகளுக்கு எதிராகவும் தாக்குதல்களை நடத்துகிறது.
எகிப்து ஜனநாயகத்தை நோக்கி முன்னேறும்வரை அதன்மீதான பெரும்பாலான இராணுவ உதவிகள் நிறுத் தப்படும் என்று ஒபாமா கடந்த 2013 ஒக்டோபரில் அறிவித் திருந்தார். இந்நிலையில் எகிப்துக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கும் 1.3 பில்லியன் டொலர் இராணுவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று சிஷியிடம் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் நலனை பேணும் அரபு கூட்டு இராணுவம் ஒன்றை அமைக்கும் முயற்சி யில் எகிப்து முன்னணியில் நின்று செயற்படும் நிலையிலேயே எகிப்துக்கான இராணுவ உதவிகளை விடுவிக்கும் அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. எகிப்து 1979 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது தொடக்கம் அமெரிக் காவின் இரண்டாவது அதிக நிதி உதவியை பெறும் நாடாக எகிப்து இருந்து வருகிறது.
அதேவேளை பலஸ்தீன விடுதலைப் போராளிகள் அமைப்பான ஹமாஸை சிஷி அரச நிர்வாகம் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப் படுதியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.எகிப்தில் இஸ்லாமியவாதிகள் மீது மிக மோசமான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் சிஷி ஒரு இராணுவ சர்வாதிகாரம் கொண்ட சர்வாதிகாரியாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகிறார்