மகிந்த சார்பு குழுவினர் பந்துல குணவர்தன வீட்டில் இரகசிய பேச்சு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் வீட்டில் சந்தித...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_80.html

இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பந்துலவின் வீட்டுக்கு சென்றிருந்தனர். நாமல் ராஜபக்ச, உதித்த லொக்குபண்டார உட்பட பலர் அங்கிருந்தனர்.
இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, சகல குற்றங்களையும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களே செய்துள்ளனர்.
அப்படி குற்றம் சுமத்தினால், அது ராஜித மற்றும் சம்பிக்க போன்றவர்களுக்கும் பொருந்தும் என பந்து குணவர்தன கூறினார்.
அதேவேளை அங்கு பேசிய மற்றுமொரு உறுப்பினர், எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் என்ன செய்வது என்று வினவினார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் தயார் நிலைகள் கட்சியில் காணப்படவில்லை என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
நாம் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். அதுவும் உண்மையான எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.
நாடாளுமன்றத்தில் 5 நிமிடம் பேசும் எதிர்க்கட்சியாக இருக்கக் கூடாது. மக்கள் பக்கம் இருக்கும் எதிர்க்கட்சி அணியாக நாம் மாறவேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். ஒரு வருடத்தின் பின்னர் நாம் இந்த போராட்ட திட்டத்தை ஆரம்பிப்போம் என பந்துல குணவர்தன யோசனை முன்வைத்ததுடன் அதனை சகலரும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது


Sri Lanka Rupee Exchange Rate