பொலிஸ் மா அதிபரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்ட ராவணா பலய
திடீரென மீண்டும் தமது இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ராவணா பலய இன்றைய தினம் கூரகல (ஜெய்லானி) பகுதிக்கு வன்முறை நோக்கோடு மேற்கொண்ட ஊர்வலம...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_57.html

திடீரென மீண்டும் தமது இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ராவணா பலய இன்றைய தினம் கூரகல (ஜெய்லானி) பகுதிக்கு வன்முறை நோக்கோடு மேற்கொண்ட ஊர்வலம் பொலிசாரால் தண்ணீர்ப் பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இது விடயத்தில் பொலிஸ் மா அதிபர் துரிதமாக செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி.
போயாவுக்கு முதல் நாள் ராவணா பலய இவ்வாறான ஒரு விடயத்தைத் திட்டமிடுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச வாசிகள் பொலிசாரைத் தொடர்பு கொண்டு முறையிட்டதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் பொலிசார் மும்முரமாகச் செயற்பட்டு தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள் கடந்த ஆட்சியில் கோத்தபாயவும் மஹிந்தவும் உருவாக்கி வைத்த இப்பிரச்சினையால் அமைதியற்ற நிலை தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இன்றைய சூழ்நிலையை பொலிசார் விரைவாகச் செயற்பட்டுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை பொலிஸ் மா அதிபருக்கும் அதேவேளை இவ்விவகாரத்தில் கூடிய கவனம் எடுத்துச் செயற்பட்ட அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோறளவுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், குறித்த பிரதேச வரலாற்று விடயங்களில் முரண்பாடு தொடர்வதோடு இன்று தடுக்கப்பட்ட விடயம் நாளை மீண்டும் தொடராது என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் குறித்த விடயத்தை சுமுகமாகக் கையாள வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உண்டு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பொது பல சேனா அமைப்பினரின் அத்துமீறிய இனவாதப் பேச்சுக்களின் விளைவாக விரைவில் இனவாதத் தூண்டும் பேச்சுக்களுக்கு எதிரான சட்டமும் வரவிருக்கின்றமையும் அதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate