மத்திய மாகாண முதல்வர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ரஞ்சித் அலுவிஹார குற்றச்சாட்டு
மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபையின் செயலாளரினூடாக சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகா...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_735.html
முதலமைச்சரின் அச்சுறுத்தல் காரணமாகவே, சபையின் செயலாளர் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார் எனவும் ரஞ்சித் அலுவிஹார குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபையின் செயற்குழுவினூடாக இவ்வாறான பிரேரணைகள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னரே சட்ட மாஅதிபருக்கு அறிவிக்க வேண்டும் எனவும், எனினும் முதலமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரின் உத்தியோகஸ்தர்களினூடாக சட்ட மாஅதிபருக்கு நேரடியாக அறிவித்துள்ளதாகவும் ரஞ்சித் அலுவிஹார சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த விடயம் குறித்து சபை உறுப்பினர்களை தெளிவுபடுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சட்டத்தினூடாக சரியான பதில் கிடைக்கும் என மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.