ஐ.எஸ்-க்கு எதிராக களமிறங்கவிருக்கும் கனடிய போர் விமானங்கள்
சிரியாவில் குண்டு தாக்குதல்களை கனேடிய போர் விமானங்கள் அடுத்த சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரி...

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களது இருப்பிடங்கள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இன்னும் சில தினங்களில் கனடிய போர் விமானங்களும் பங்குபெறுவதற்கான இறுதிகட்ட ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொறுப்பான தளபதி பிரிகேடியர் ஜெனரல் டான் கொன்ஸ்ரபிள் தெரிவித்துள்ளார்.