தோனியிடம் தண்டப் பணம் அறவிட்ட இந்திய பொலிஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர், மகேந்திர சிங் தோனி, மோட்டார் சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அவரிடம், பல இலட்ச ரூபாய் ...

தோனியிடம் தண்டப் பணம் அறவிட்ட இந்திய பொலிஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர், மகேந்திர சிங் தோனி, மோட்டார் சைக்கிள் பிரியர் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

அவரிடம், பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக மோட்டார் சைக்கிள்கள் ஏராளமாக உள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.

இதுதவிர சென்னை மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தன்னிடம், விலையுயர்ந்த பல மோட்டார் சைக்கிள்கள் இருந்தாலும், முதல் முதலாக, வாங்கிய மோட்டார் சைக்கிள் மீது தான், அவருக்கு அதிக பிரியம். அதனை அவ்வப்போது ஓட்டிப் பார்த்து மகிழ்வார் தோனி.

அதற்கு முன்னர் ஆசையாக தனது சொந்த ஊரில்மோட்டார் சைக்கிளில் வலம் வந்துள்ளார் ஆனால் அவரின் மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடு எதுவும் இல்லை, என ராஞ்சி பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் அவருக்கு 500 ரூபா அபராதம் விதிக்கபட்டு உள்ளது.இதை ராஞ்சியின் போக்குவரத்து பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

ராஞ்சியில் இலக்கத் தகடு இல்லாமல் மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம் அதன்படி கண்காணிக்கப்பட்டதில்தோனி ஓட்டிய மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடு இல்லை, அதனால் தான் நாங்கள் அவருக்கு அபராதம் விதித்து உள்ளோம் என பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

டோனி பதிவு செய்யபட்டாத மற்றும் இலக்கத்தகடு இல்லாத வாகனங்களை கண்காணிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு அவர் ராஞ்சி நகரில்பொலிஸாருக்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்ததுள்ளார்.

Related

விளையாட்டு 7512299587359793523

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item