விசாரணைக்கு அழைத்தமை புத்தாண்டுப் பரிசு: மகிந்த
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை புத்தாண்டுப் பரிசு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பேக...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_622.html
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை புத்தாண்டுப் பரிசு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பேகமுவ ரஜமகா விகாரையில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்புக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. விகாரைகளில் பூஜை நடத்தக் கூட சுதந்திரம் இல்லை.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியது ஒரு ஊழல் என்று கூறப்படுகிறது.
நாட்டின் ஜனாதிபதியாக இருந்து கொண்டு, அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாவிட்டால், அந்தப் பதவி தேவையற்றது.
அத்துடன், எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் புதிய அரசாங்கத்தினால் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate