இந்தியாவிடம் மேலதிக உணவுத் தேவையை நாடும் வடகொரியா!
அண்மையில் இந்தியா வந்திருந்த வடகொரிய வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ்ஜுக்கும் இடையே டெல்லியில் இராஜங்க ர...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_583.html
அண்மையில் இந்தியா வந்திருந்த வடகொரிய வெளியுறவு அமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா சுவராஜ்ஜுக்கும் இடையே டெல்லியில் இராஜங்க ரீதியான சந்திப்பு இடம்பெற்றது.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இந்தியாவிடம் இருந்து தாம் இன்னமும் அதிக உணவு உதவியை எதிர்பார்ப்பதாக வடகொரிய அமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார்.பதிலுக்கு சுஷ்மாவோ பாகிஸ்தானுக்கு அதி நவீன அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தொழிநுட்பம் தொடர்பில் வடகொரியா இரகசியமாக உதவி வருவதை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். வடகொரிய வெளியுறவு அமைச்சரான ரி சு யொங் என்பவரே ஏப்பிரல் 12-14 வரையிலான காலப் பகுதியில் முதன் முறையாக இந்திய அமைச்சரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள முதல் வடகொரிய அமைச்சர் ஆவார். இதன் பின்னணியில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தென்கொரிய விஜயத்தின் மீது அழுத்தத்தை சுமத்துவது என்பதும் அமைந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் மிக வெளிப்படையாகவும், நட்புடனும் பேசிக் கொள்ள முடிந்ததாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து வலியுறுத்திய சுஷ்மா இந்தியாவின் இலகுவாக செயற்படும் கொள்கை (Act East policy) அடிப்படையில் கொரியத் தீபகற்பத்தில் சமாதானமும் நிலைத் தன்மையும் ஏற்பட வடகொரியா செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். வடகொரியாவைத் தவிர்த்து கிழக்கு ஜப்பான் கடலில் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் கூட இந்தியா மிக வலிமையான வரத்தக மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
1950-53 காலப் பகுதியில் இரு கொரிய நாடுகளுக்கும் இடையே யுத்தத்தின் பின் எட்டப் பட்ட ஒப்பந்தமானது வெறும் யுத்த நிறுத்த ஒப்பந்தமாக மட்டும் நிறைவேற்றப் பட்டதுடன் அது ஒரு சமாதான ஒப்பந்தம் அல்ல என்பதால் தான் இன்று வரை வட மற்றும் தென் கொரிய நாடுகள் தமக்கிடையே பகைமை காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்மா சுவராஜ்ஜை வடகொரியா வருமாறு சந்திப்பின் இறுதியில் ரி சு யொங் அழைப்பு விடுத்ததாவும் செய்திகள் கூறுகின்றன.