பொதுத் தேர்தலில் களமிறங்க தயாராகும் விமுக்தி குமாரதுங்க மற்றும் சத்துரிகா சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஒரே மகனான கால்நடை மருத்துவர் விமுக்தி குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_282.html
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஒரே மகனான கால்நடை மருத்துவர் விமுக்தி குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழைவதற்கு தாய் சந்திரிக்காவின் முழுமையான ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.
ஒரு போதும் அரசியலில் நுழையமாட்டேன் என கூறிக்கொண்டிருந்த விமுக்தி குமாரதுங்க, தந்தை பண்டாரநாயக்கவின் ஆதரவாளர்கள் வழங்கிய யோசனைக்கடுத்து தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமுக்தி குமாரதுங்க வெகுவிரைவில் இலங்கையில் மிக தரமான விலங்குகளுக்கான மருத்துவமனை ஒன்றை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை பூட்டான் பிரதமர் ஷெரின் டொப்கேயின் இலங்கை விஜயத்தின் போது அவரது மனைவியின் உதவி பெண்ணாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன செயற்பட்டதன் ஊடாக அரசியல் வட்டாரங்களில் வெகுவாக பேசப்பட்ட ஒருவராகிவிட்டார்.
எது எவ்வாறாயிருப்பினும், சமீபத்தில் பொலன்நறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தனது குடும்பத்தில் உள்ள எவரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என கூறியமை குறிப்பிடத்தக்கது.