19வது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்!- மாதுளுவாவே சோபித தேரர்
உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின...
http://kandyskynews.blogspot.com/2015/04/19_15.html
உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தாம் கடுமையாக பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் தற்போது சாதகமான நிலை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரும் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சோபித தேரர் தெரிவித்துள்ளார்.