2000க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் போகோஹரம் தீவிரவாதிகள்!!!
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குறிப்பிட்ட கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் வடகிழ...
http://kandyskynews.blogspot.com/2015/04/2000_15.html
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் குறிப்பிட்ட கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போனோவில் உள்ள சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ந்தேதி தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் பல்வேறு நாடுகளின் படை வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மாணவிகள் கடத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இதுவரை அவர்களை மீட்கும் முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
கடத்தி செல்லபட்ட பெண்கள் பாலியல் அடிமைகளாகவும்,தற்கொலை தீவிரவாதிகளாகவும் மேலும் அவர்களுக்கு மூளை சலவை செய்து ஆயுதம் ஏந்துபவர்களாகவும் தீவிரவாதிகள் மாற்றி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அவர்கள் இதுவரை கடத்தி சென்ற பெண்கள் 2 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கூறி உள்ளது.
90 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் அதற்கு சாட்சியாக அதிர்ச்சி அளிக்கும் புகைபடங்கள், புதிய சாட்டிலைட் படங்கள், நைஜீரியா முழுவதும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் காட்டபட்டு உள்ளது.
புதிய தகவலாக சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண்கள் தங்களது போராளிகளை திருமணம் செய்து கொண்டதாக போகோ ஹரம் தலைவர் அபூபக்கர் ஷேகு கூறி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.