தலாய்லாமாவுக்கு வீசா மறுப்பு?
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருவதற்கு வீசா வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் செய...


வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு மஹாபோதி அமைப்பின் இலங்கை கிளைத் தலைவர் பானகல உபதிஸ்ஸ தேரர், தலாய் லாமாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், தலாய் லாமாவிற்கு வீசா வழங்குவது சீனாவுடனான நட்புறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இலங்கை அரசாங்கம் தலாய்லாமாவிற்கு, வீசா வழங்காது என வெளிவிவகார அமைச்சின் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், மியன்மாரில் பாரியளவில் கடும்போக்குடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட பௌத்த துறவியான விராது என்ற பிக்குவிற்கு இலங்கை விஜயம் செய்ய கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.