தன்னை பிரதமராக்கும் ஆதரவு அணியின் கூட்ட மேடையில் ஏற தீர்மானித்துள்ள மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தினேஷ் குணவர்தன , விமல்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_411.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தினேஷ் குணவர்தன , விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அடுத்த பொதுக் கூட்டத்தில் மஹிந்த கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 8ம் திகதி குருநாகலையில் நடைபெறவுள்ள கூட்ட மேடையில் மஹிந்த ஏறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள டி.பி.ஏக்கநாயக்க 8ம் திகதி மஹிந்தவை எமது மேடைக்கு ஏற்றிக்காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தனக்கு ஆதரவான அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அவர் இன்னும் தீர்மானத்தை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Sri Lanka Rupee Exchange Rate