எதிர்க்கட்சித் தலைவர் யார்? - நாளை மறுநாள் விடை கிடைக்கும் என்கிறார் சம்பந்தன்
எதிர்க்கட்சி தலைவர் யார் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் நாளை மறுதினம் கிடைக்கும் என எதிர்ப்பா...


அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இவை தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.
இந்நிலையில் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் அவை எதிர்க்கட்சியாக வாய்ப்பில்லை. எனவே அடுத்ததாக உள்ள பெரும்பான்மை கட்சிக்கே எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு பெரும்பான்மை கட்சியாக விளங்குவது த.தே.கூட்டமைப்பாகும். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்கப்படுமானால், அது குறித்து ஆச்சரியப்படவோ, வழங்கப்படாவிட்டால் அது குறித்து கவலைப்படவோ போவதில்லை.
எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிடினும் எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நேர்மையானதாக இருக்கும். ஒருவேளை நாம் எதிர்க்கட்சித் தலைவராக முறையாக அறிவிக்கப்பட்டால் உண்மையாகச் செயற்படுவோம். எமக்கு மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் அனைத்தினதும் பூரண ஆதரவு உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.