பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_288.html

கடுவளை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று (22) பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைதந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற சில கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..
இந்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.


Sri Lanka Rupee Exchange Rate