எரிபொருள் விலை குறைப்பினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய இழப்பு!
எரிபொருள் விலைக் குறைப்பினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலைக் கு...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_23.html

எரிபொருள் விலைக் குறைப்பினால் ஜனவரி மாதம் 22ம் திகதி முதல் இதுவரையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஐந்து பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் சில தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
எரிபொருளுக்கான வரிகளை அகற்றிக் கொள்ளாத காரணத்தினால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலைக் குறைப்பினால் மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதனால், இந்த நட்டம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் வரி அறவீடுகளை நீக்கி மக்களுக்கு நன்மை அளிப்பதனை தவிர்த்து அரசாங்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை நட்டமடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டமானது பாரியளவில் தொழிலாளர்களை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.