பேஸ்புக்கில் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

கணவனின் இருப்பிட முகவரி தெரியாத மனைவிக்கு, ‘பேஸ்புக்’ வலைதளத்தில் விவாகரத்து ‘நோட்டீஸ்’ அனுப்ப, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள...

பேஸ்புக்கில் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
கணவனின் இருப்பிட முகவரி தெரியாத மனைவிக்கு, ‘பேஸ்புக்’ வலைதளத்தில் விவாகரத்து ‘நோட்டீஸ்’ அனுப்ப, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த எலனோரா பயது என்னும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும், கடந்த 2009ம் ஆண்டு, கானா நாட்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.

அதன்பின், அவரது கணவர், எலனோராவைப் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், தொலைபேசி மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலம், இருவரும் தொடர்பு கொண்டனர்.
இந்நிலையில், கணவனிடம் இருந்து விவாகரத்துக்கோரி, எலனோரா சார்பில் அவரது வழக்கறிஞர் ஆண்ட்ரூ ஸ்பெனல், மன்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ கூப்பர், எலனோராவின் கணவரின் முகவரி தெரியவில்லை என்பதால், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து மூன்று வாரங்கள் வரை, ஒவ்வொரு வாரமும் விவாகரத்து நோட்டீசை, பதிவிடலாம், நோட்டீசை ஒப்புக் கொள்ளும் வரை, இந்த நடைமுறையைத் தொடரலாம் என்று நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்

Related

உலகம் 3765719243041218083

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item