கூட்டமைப்பில் இருந்து நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீக்கம்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய ம...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_169.html
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர்.
அநுர விதானகமகே, வடிவேல் சுரேஸ், கித்சிறி சேனாரத் அத்தநாயக்க மற்றும் ஹரேந்திர தர்மதாஸ ஆகியோரே இந்த நால்வருமாவார்.
குறித்த நால்வரும் எதிர்க்கட்சி தலைவர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவை வெளியிட்டதன் மூலம் ஊவா மாகாணசபை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்துக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.