மஹிந்தவுக்கு ஆதரவாக 5000 பிக்குகளின் பேரணிக்கு ஏற்பாடு..!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துமாறு கோரி பெளத்த பிக்குகள...


பிக்குகள் 5000ற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும்பேரணி ஒன்றினை நடத்துவதற்கு தேசிய பெளத்த பிக்குகள் சங்கம் தயாராவதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இவ் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார் என அந்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது
நல்லாட்சியில் பழிவாங்கள் இடம் பெற கூடாது. எனினும் தொடரந்து பழிவாங்கள் இடம் பெற்றக்கொண்டே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபகச்விற்கு வாக்களித்த 58 லட்ச மக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து அறிக்கை ஒன்று வழங்குவதற்கு சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தி தருமாறு இலஞ்ச ஊழல் ஆணைகுழுவிடம் தேசிய பெளத்த பிக்குகள் சங்கம் விசேட வேண்டுக்கோள் ஒன்றினை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்