யக்கலமுல்ல பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது
காலி யக்கலமுல்ல பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்பொன்றில் 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2 சந்தேகபர்கள் கைது செய்யப்பட...
http://kandyskynews.blogspot.com/2015/04/2_24.html

காலி யக்கலமுல்ல பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்பொன்றில் 8 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2 சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து 17 மற்றும் 14 வயதான இருவரை பொலிஸார் நேற்று (23) கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவனை கழுத்து நெறித்து கொலை செய்ததாக சந்தேகநபர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எட்டு வயது சிறுவனை 3 நாட்களாக தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தடுத்து வைத்து சந்தேகபர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் காலி ஹினிதும பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யக்கலமுல்ல பகுதியிலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றினுள் இருந்து இம்மாதம் 8 ஆம் திகதி குறித்த சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


Sri Lanka Rupee Exchange Rate