தற்போதைய தேர்தல் முறைமையை பாதுகாத்துக் கொள்ள 25 கட்சிகள் முயற்சி

தற்போதைய தேர்தல் முறைமையை பாதுகாத்துக்கொள்ள 25 சிறிய கட்சிகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்...

தற்போதைய தேர்தல் முறைமையை பாதுகாத்துக்கொள்ள 25 சிறிய கட்சிகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் அண்மையில் கொழும்பில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

தற்போதைய விருப்பத் தெரிவு தேர்தல் முறைமை மிகவும் நியாயமானது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேர்தல் முறைமை நீக்கப்பட்டால் சிறிய கட்சிகள் பாரியளவில் பாதிக்கப்படும்.

இந்த முறைமை மாற்றப்பட மாட்டாது என ஜனாதிபதியும் பிரதமரும் இணங்கியுள்ளனர் என விக்ரமபாகு கருணாரட்ன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரவித்துள்ளார்.

Related

இலங்கை 4759918669813160601

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item