நரேந்திரமோடி நாடு திரும்பினார்

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமது உத்தியோகபூர்வ இரண்டு நாட்கள் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார். நேற்...



இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமது உத்தியோகபூர்வ இரண்டு நாட்கள் விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்.

நேற்று முன்தினம் இலங்கை வந்த அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றிருந்தார்.

தொடர்ந்து அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புகளை நடத்தியதுடன், பல்வேறு உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக ஏப்ரல் 14ம் திகதிக்கு பின்னர் இலங்கையர்களுக்கு இந்தியாவின் வருகைக்கு பின்னரான வீசா வழங்கும் திட்டம் அமுலாக்கப்படவும், திருகோணமலையை பெற்றோலிய கேந்திரநிலையமாக மாற்றுவதற்கும் இணக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து வெளியிட்டிருந்த நரேந்திரமோடி, ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையில் தமிழ் மக்கள் அபிலாசகளை வென்று, சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்படுவதுடன், அதற்குமேலும் செல்லவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை அடுத்து இலங்கையின் நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்தினார்.

இதன் போது இலங்கையுடன் ஒத்துழைத்து செயற்படுவதில் பெருமை கொள்வதாகவும், கூட்டுசமர்ஷ்ட்டி முறையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள தாம், இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதன் அடிப்படையில் அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று கருதுவதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த வகையில் அரசியல் தீர்வு ஒன்றுக்கான கோரிக்கையையும், காணாமல் போனோரின் விடுதலை மற்றும் காணிவிவகாரங்களின் தீர்வு போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

இதன் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுமை காக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின்  வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

பின்னர் பௌத்தவணக்கஸ்த்தளங்களுக்கு விஜயம் செய்திருந்த அவர் தலைமன்னார் சென்று தலைமன்னாருக்கும், மடுவுக்குமான தொடருந்து சேவையை ஆரம்பித்துவைத்தார்.

இதன்படி 25 வருடங்களின் பின்னர் கொழும்புக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தொடருந்து சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்திய வீட்டுத் திட்டத்தை கையளித்துடன், அதன் புதிய கட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டியதுடன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் நேற்றுமாலை அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையக அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தைகளில், அமைச்சர்களான பி.திகாம்பரம், க.வேலாயுதம் மற்றும் பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருடன், ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரைக் கொண்டகு ழுவைமுதலில் சந்தித்திருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

Related

இலங்கை 6573202861783504193

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item