"பதவி விலகக் கூடும்" : போப் பிரான்சிஸ் சமிக்ஞை
போப் பதவியிலிருந்து தான் விலகக் கூடும் எனும் சமிக்ஞையை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தனக்கு முன்னர் பதவ...


போப் பதவியிலிருந்து தான் விலகக் கூடும் எனும் சமிக்ஞையை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். தனக்கு முன்னர் பதவியில் இருந்த போப் பெனடிக்ட் போலவே தானும் பதவி விலகக் கூடும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்சிஸ் எளிமையான போப் என்று அறியப்படுகிறார்
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக அதாவது போப்பாக அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைடைந்துள்ள நிலையிலேயே, மெக்ஸிகோ நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலேயே இந்தச் சமிஞ்கையை அவர் வெளியிட்டார்.
போப்பாக இரண்டு வருடங்கள் பொறுப்பில் இருக்கும்தான் நீண்ட காலத்துக்கு அதில் தொடருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை குறிப்புணர்த்தியுள்ளார்.
ஆண்டவர் தன்னை வத்திகானுக்கு சிறிய காலத்துகே அனுப்பியுள்ளார் என்று தான் கருதுவதாகவும், அதன் காரணமாகவே ஒரேயொரு பெட்டியுடன் தான் ரோமுக்கு வந்துள்ளதாகவும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
நான்கு அல்லது ஐந்து வருடங்கள் அல்லது குறைவான காலப் பகுதியே தான் போப்பாக இருக்கக் கூடும் என பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முன்னர் போப்பாக இருந்த பெனடிக்ட் அவர்கள் பதவி விலகியது மிகவும் தைரியமான ஒரு செயல் என்று புகழ்ந்துரைந்த்தார்.
"பிட்சா பிரியர்"

பெனடிக்ட் அவர்கள் போப் பதவியிலிருந்து விலகியது ஒரு தனிப்பட்ட சம்பவமாகப் பார்க்கக் கூடாது என்று அதை ஒரு பெரிய சீர்த்திருத்த முயற்சிகாகவே பார்க்க வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கூறுகிறார்.
அவ்வகையில் கத்தோலிகத் திருச்சபை எனும் மாபெரும் ஒரு நிறுவனத்தில் புதிய வழியொன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அப்பேட்டியில் கூறினார்.
முன்னரும் கூட போப் பொறுப்பிலிருந்து தான் ஓய்வு பெறக்கூடும் என்பதற்கான சமிஞ்கைகளை அவர் வெளியிட்டுருந்தார்.
எனினும் கத்தோலிகத் திருச்சபையில் பொறுப்புகளில் இருப்பதற்கு வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தை தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.
போப் பதவியில் ஒருவர் 80 வயது வரை இருந்தால் அவர் இயலாதவர், அவரால் ஒன்றும் காத்திரமாகச் செய்ய முடியாது எனும் எண்ணம் ஏற்படக் கூடும் எனவும் போப் பிரான்சிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற போப் பெனடிக்டுடன் போப் பிரான்சிஸ்(இடது)
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி போப்பாக பதவியேற்ற பிரான்சிஸ் எளிமையாக வாழ்க்கை மேற்கொண்டுள்ளார் என புகழாராங்கள் சூட்டப்படுகின்றன. அதேவேளை அந்தத் திருச்சபையின் உள்ளக நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தம் செய்யவும் அவர் உறுதிகளை வழங்கியுள்ளார்.
தனது கருத்துக்கள் ஒரு எண்ணமே என்று கூறியுள்ள அவர் அதுவே முடிவல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போப்பாக இருப்பது குறித்து மகிழ்ச்சி என்றாலும், முகம் தெரியாமல் ஒரு பாதிரியாராக மக்கள் சேவை செய்துவந்த வாய்ப்பை தான் இழந்துள்ளதாகவும் மெக்ஸிகோவின் டெலிவிசியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த அந்தப் பேட்டியில் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
யாரும் அறியா வண்ணம் ஒரு நாள் ரோமிலிருந்து வெளியேறி ஒரு சாப்பாட்டுக் கடையில் சென்று பிட்சா சாப்பிட வேண்டும் என்பதே தனக்கு இப்போது இருக்கும் ஒரே ஆவல் எனவும அப்பேட்டியில் அவர் கூறினார்.